மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி

ஒம் சிவாய நம..

எல்லா ஆண்டும் மஹாசிவராத்திரி ஸ்பெஷல் தான்.

இந்த 2019 ஆம் ஆண்டில் மார்ச் 4 ஆம் தேதி அப்படி என்ன ஒரு ஸ்பெஷல்  மஹாசிவராத்தரி

மஹாசிவராத்திரி என்றாலே என்ன பலன் என்று பலருக்கு ஆன்மிக ரீதியாக பல கருத்துக்கள்  தெரியும்.

ஜோதிட ரீதியாக இதோ உங்கள் முன் இந்த ஆண்டில்…..

சிவன் இல்லை என்றால் சக்தியும் இல்லை – சிவசக்தி சிவ+சக்தி.

சிவசக்தி உண்டானது

நாம் ஒவ்வொருவரும் சிவன் -ஆண் தன்மையிலும்

சக்தி -பெண் தன்மையிலும் வளர்ச்சி காண உதவும்.

இராத்திரி என்பது இருட்காலம் (சந்திரன்

இருட்டு ) எனப் பொருள்படும். உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனை சர்வ சங்கார காலம் அல்லது பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது அமைதி நிலவுவது போல பஞ்ச பூதங்களும் தனு, கரண, புவண போகங்களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பதனால் அமைதி நிலவும். அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே அது ‘சிவராத்திரி’ எனக் கொள்ளப்படுகிறது. உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும். இதனால் அந்த இரவை சிவராத்திரி என்பர். மேலும் ராத்திரி என்பதற்குப் ‘பூசித்தல்’ எனும் பொருளும் உண்டு. இதன்படி “சிவனை பூசிக்க தகுந்த இரவே “சிவராத்திரி” என பொருள்படும்.

யோக சிவராத்திரி : சோம வாரம் ( திங்கட்கிழமை ) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி. மகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.

மார்ச் 4 ஆம் தேதி – சூரியன் அஸ்தமனம் (மறையும்) காலம் -06.19PM தொடங்கி ~மார்ச் 5 ஆம் தேதி சூரியன் உதயம் காலம் 06.29AM ஆகும் காலம் மகாசிவராத்திரி காலம்

இந்நாளில் நாம் விழப்புணர்வு மேற்கொண்டால் பல இன்னல்கள்,தோஷங்கள்,பல தீய கர்மாவில் இருந்து விடுபடலாம். எந்த விரதம் மேற்கொள்ளாவிட்டாலும் இந்த விரதம் மேற்கொண்டால் அனைத்து சந்தோஷம் சுபநிகழ்வுகள் வாழ்வில் பெற்று சுகமாக வாழ சிவன் அருள் புரிவார் என்பதை இந்த காலம் உணர்த்தும்.

 

[woodmart_gallery images=”2742″ view=”grid” spacing=”0″ columns=”1″ lightbox=”yes” img_size=”1200×600″ caption=”0″ lazy_loading=”no”]
[woodmart_gallery images=”2742″ view=”grid” spacing=”0″ columns=”1″ lightbox=”yes” img_size=”1200×600″ caption=”0″ lazy_loading=”no”]

VALUE ADDITION REQUIREMENTS FOR SPIRITUAL PRODUCTS.
BENEFITS OF AUTOMATIC POOJA BELL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories