கச்சபம் என்றல் ஆமை உருவம். பாற்கடலில் அமிர்தம் எடுக்கும்போது சிவாபெருமானுடன் திருமால் ஆமையுருவில் சேர்ந்து காட்சி கொடுக்கிறார், ஆகையால் கச்சபேஸ்வரர் என பெயர் பெற்று மொழி வழக்கத்தில் கச்சாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது .
இறைவன் : ஸ்ரீ கச்சபேஸ்வரர் .
இறைவி : ஸ்ரீ சௌந்தராம்பிகை .
அமைவிடம் : அரண்மனைக்கார தெரு , பாரி முனை , சென்னை .
திறந்திருக்கும் நேரம் : 6.30 A .M to 11.30 A .M .4.30 P. M to 8.30 P. M.
கோவில் நிறுவன விபரம் : தளவாய் செட்டியார் என்ற சிவா பக்தர் 1720 ஆம் ஆண்டு கோவிலை கட்டதொடங்கி 1728 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் . நிகழ்த்தினார்
கோவிலின் சிறப்புக்கள் :
1. பஞ்ச முக கணபதி சித்தி புத்தி சமேதராக கோலம் .
2.63 நாயன்மார்களின் சிலைகளும் விபரங்களும்.
3 சென்னை மா நகரில் அமைக்கப்பட்ட முதல் அய்யப்பன் சன்னிதி
4.ஆன்மிக நிகழ்வுகளின் அற்புதமான சுதை சிற்பங்கள்.
5.சுவர்களில் பாதிக்கப்பட்ட : துர்கா ஸ்தோத்திரம்
துக்க நிவாரணி அஷ்டகம், ரோக நிவாரணம் அஷ்டகம்,
ராகு கால துர்கா அஷ்டகம், சௌந்தர்ய லஹிரி, ஷண்முகன் கவசம், தேவாரம் பாடல்கள் மற்றும் பல.
6.ஆன்மிகம் சம்பந்த பட்ட அழகிய பெரிய வண்ணப்புகை படங்கள்.
இங்கு வருபவர் கள் வழிபாடு நேரத்திற்கு மேல் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகம் இருந்து ஆன்மீக விவரங்களை அறிந்து பயன் பெறவும் .