திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் . Sri Kandaswamy Temple - Thiruporur - Automatic Pooja Bell - R&R Spirituals
July 3, 2019

திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் . Sri Kandaswamy Temple – Thiruporur

அமைவிடம்      : சென்னையில் இருந்து 42 கி . மீ , அங்கு இருந்து மஹாபலிபுரம் 15 கி .மீ .

கோவில் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை .

கோவில் தகவல்கள் :

  1. ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் கந்தஸ்வாமி கடவுள் சுயம்பாக தோன்றி அருள் பாலிக்கிறார். சுமார் 6 அடிக்கு மேல் உள்ள மூலவருக்கு அபிஷேகம் ஏதும் கிடையாது . கோவில் நிர்வாகத்தால் சாற்றப்படும் வில்வ மாலை மட்டும் அணிவிக்கப்படுகிறது . அர்ச்சனை மற்றும் பிற மாலைகள் சாற்றுவது எல்லாம் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உற்சவருக்கு  சமர்பிக்கப் படுகிறது .
  2. ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் ஸ்ரீமத் சிதம்பரம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கு செய்யப்படுகிறது .
  3. சுயம்பு மூர்த்தியாக ஒரு பனை மரத்தின் அடியில் இருந்து மூலவர் வெளிப்பட்டார். அந்த பனை மரத்தின் அடிப்பாகம், அட்சயப் பாத்திரமாக வடிவமைக்கப் பட்டு வெளிப்பிரகாரத்தில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது .
  4. சனிஸ்வரபாகவன் தனியாக அருள் பாலிக்கிறார் .
  5. 6 முறை சிதிலமடைந்த கோவிலை 7 வது தடவையாக புனரமைத்த ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது .
  6. ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகள் மதுரையை சேர்ந்தவர், அவர் 1659 வருடம் வைகாசி மாதம் இங்கு ஒளியாக கந்த சுவாமி கடவுளுடன் கலந்தார்.
  7. ஸ்ரீமத் சிதம்பரம் ஸ்வாமிகள் மடமும் இங்கு உள்ளது .
  8. திருப்போரூர் சந்நிதி முறை மாலையை இயற்றி உள்ளார். கோவிலில் இது பதிக்கப்பட்டு உள்ளது .
  9. திருபுகழில் அருணகிரி நாத ஸ்வாமிகளும், கந்த சஷ்டி கவசத்தில் பாலதேவராய ஸ்வாமிகளும் இக் கோவிலை பாடி உள்ளனர்.
  10. முருகப் பெருமான் வானில் இங்கு அசுரரை அழிக்க போர் நடத்தியதால், இதற்கு போர் + ஊர் = போரூர் என்ற பெயர் ஏற்பட்டு திருப்போரூர் என்று அழைக்கப்படுகிறது .

குறிப்பு : நேரிடையாக கோவிலுக்கு சென்று அறிந்ததையும் மற்றும் கோவில் தல வரலாறில் உள்ள விபரங்களையும் கொண்டு மேலே உள்ள விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன .

One thought on “திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் . Sri Kandaswamy Temple – Thiruporur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *