கோவில் மணி /பூஜை மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!! - Automatic Pooja Bell - R&R Spirituals
May 18, 2019

கோவில் மணி /பூஜை மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்…!!

கோவில் மணி/பூஜை மணி ஒலிக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

 

பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி/பூஜை மணி   அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள்.

automatic pooja bell

 

ஆகம சாஸ்திரங்களின் படி, மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.

கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.

 

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.

 

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.

மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

 

அதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும் போதெல்லாம் ஒரு விதமான தனி புத்துணர்வு ஏற்படுகிறது…

கோவில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிப்பதைக்கேட்க நேர்ந்தால் பரிகாரங்கள் பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *